கண்வனம்

கண்ணாடி மென்மையின்
நீள் வட்டமாய்...
முகிழ்ந்தும்...நெகிழ்ந்தும்...
அன்பின் நீறணிந்தும் பரிமளிக்கிறது...
நாசியின் உச்சியில் சரிந்து
தன் இன்னொன்றைப் பார்த்து மடங்கும்
ஒரு கண்.

மூடிய இமையின் விளிம்பில் ஒழுகும்
நீல வானத்தின் இருமையில்
தன்னை எழுதியதாக உணர்ந்து...
கருவிழி குதித்தோட...
பால்வீதியில் முளைத்த மின்மரமென
கனவுகளில் ஒளிரும்...
கண்வனம்.

ஏதோ..இரகசியம் சொல்லி
அந்தியில் திரிந்த வானம் சாய்கையில்...
வானேறிய பறவைகளுக்கு அப்பால்...
உதிர்ந்து துயரம் சரிக்கும்
இமைவனத்தில் முளைக்கும் கடல்.

வெளிச்சத்தை யாசிக்கும் கரும் பறவை
தன் சிறை தன் வனப்பென்று பகர...
சிறகுகளில் கனவுகள் வளர்த்து...

இமைவனத்தின் நிலப்பரப்பில்
புரிபடாச் சப்தங்களில் சொல் வளர்த்து

நானும் அறியாமல்...என்னோடு நடக்கிறது
என் கண்வனம்.

எழுதியவர் : rameshalam (28-May-15, 9:15 pm)
பார்வை : 81

மேலே