பற்று+
பற்றுதல் என்பது
தானாய் வரும்!
பயத்திலும் வரும்!
பாசத்திலும் வரும்!
பற்றாய் வந்து
தஞ்சம் புகுந்தவரை
வஞ்சிப்பது
பாசத்திற்கு அழகல்ல!
பயந்தே போனாலும்
அண்டிய அனுமாரை
தண்டிக்க மனமில்லை
தாங்கினேன் பயத்துடன்!
இத்தனை இமைகள்
மூடாமல் கண்டிருக்க
இதனோடு எனையும்
காப்பீர் என்ற நம்பிக்கையில்!