வாழ்வின் பாடங்கள்

வாழ்கை சொல்லும்
பாடம் என்ன .....

திரும்ப பெறமுடியா உன்
மழலை சிரிப்பு!
எதற்கென்று தெரியா
உன் ஆரம்ப படிப்பு !

இப்படி
கூட்டு புழுவாய் இருந்த
உன் வாழ்கை
வண்ணத்து பூச்சியை போல் மாறியது!
சிறகடித்து பறந்தாய்
அது சிந்தனை உன்னை
சிறை படுத்தாத காலம்......

பருவகள் மாறியது
பாரங்கள் கூடியது ...
மனம் ஏன் என்ற கேள்வி
கேட்க தொடங்கியது ,

உன் கடமைகள் கூட
உனக்கு கை விலங்காக தெரிந்தது...
நீ ஆசை பட்டதெல்லாம்
கானல் நீராக போனது ......

காரணம்
வாழ்க்கையின் பாடத்தினை
நீ சரியாக புரிந்து கொள்ளாததுதான் ....
அன்பு, பண்பு, கருணை
ஈகை, பொறுமை,
இவைகளை உன் மனதின் பாடமாக
ஏற்று கொண்டால் - உன்
ஆசைகள் அனைத்தும்
இறைவனால் ஆசிர்வதிக்கபடும் ......................

என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (29-May-15, 10:10 am)
சேர்த்தது : மனிமுருகன்
Tanglish : vaazhvin paadangal
பார்வை : 113

மேலே