சிந்தனைத் தழல்

போலிகள் கூத்தாடும் வீதியில்
பொய்கள் சாமி ஆடுது !

வாய்ப்பந்தலிட்டு வானத்தில் இடம் காட்டுவான்
வயிற்றுக்கு சோறெங்கே என்றால் கையை விரிப்பான் !

திடமிட்டுவான் வட்டமைப்பான் குழுச் சேர்ந்து கூட்டமைப்பான்
நெஞ்சிலே நஞ்சேற்றி ஈனம் வளர்ப்பான்
மனசாட்சியை கழுவிலேற்றி போலியாக மானம் பேசுவான்
தானும் தனதும் உயர்வென்று சுயநலத்தில் உலாவருவான்
மாற்றுகிறேன் என்று சூளுரைத்து மனித கூட்டத்தையே ஏமாற்றுவான்
எத்தழல் கொண்டு வேள்வி செய்வேன் இந்த ஈனம் ஒழிக்க
என்னருந் தமிழ் வாணியே !

புன்னகை முகம்காட்டி பொய்க்குழல் ஊதி காரிருள் வீதிக்கு
இசையால் ஈர்த்துச் செல்வான்
கண்டுகொள்வாய் சகியே இவனை அடையாளம் கண்டு கொள்வாய் !

தவறான சிந்தனைக்கு கொத்தடிமை பூண்டு சுயம் இழக்காதே
தன சிந்தனையில் தாமரையாய் விரிவாய் ஆதவனாய் ஒளிர்வாய் இளைஞ !

சிந்தனைத் தழல் கொண்டு நெஞ்சில் வளர்ப்பாய் சத்திய வேள்வி
வாழ்வில் உயர்வாய் அக்கினி சோதியைப் போல் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-15, 9:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே