அவள் முன் முட்டாளாய் நான்

பலமுறை முட்டாளாய்
தலைகுனிந்து கொண்டிருக்கிறேன்...
என் ஒரு வயது
குழந்தையின் கேள்விகளுக்கு
பதில் கூற முடியாமல்....
நான் பெற்ற
பட்டமெல்லாம் அவள்
கேலி புன்னகையில்
நாணமுற்று கிடக்கிறது...

எழுதியவர் : இந்திராணி (29-May-15, 11:31 am)
பார்வை : 279

மேலே