அரபுக் குதிரைகள்

சோர்ந்து ஓரிடத்தில் நில்லாது
போராடும் குணம் விடுக்காது
மிரட்டல் எதற்கும் அஞ்சாது
சோகம் கொண்டு மயங்காது
கடமை தன்னை மறவாது
கண்ணியம் தன்னைக் கொல்லாது
கட்டுப்பாடு எதுவும் மீறாது
ஈனச் செயல்கள் புரியாது
தர்மம் தன்னை விடுக்காது
வேற்றுமை எண்ணம் கொள்ளாது
ஆற்றின் இடையில் மூழ்காது
தோல்விகள் கண்டு துவளாது
வாழ்வினில் என்றும் வெற்றியே
என ஓடிடும் ஓடிடும்
அரபுக் குதிரைகள் தாம்
வாழ்வில் சாதனை செய்திடும்
மனிதர்கள்..மனிதர்கள்..என்றுமே!

எழுதியவர் : கருணா (29-May-15, 11:59 am)
Tanglish : arabuk kuthiraigal
பார்வை : 102

மேலே