ஏன் எதற்கு
எல்லாவற்றையும்
"ஏன்..எதற்கு.."
என்று கேள்வி கேள் ..
என்று சாக்ரடீஸ் சொன்னதால்
நானும் எதையும் ஏற்பதே இல்லை..
நல்லதைக்கூட
ஏன்..என்பேன்..
எதற்கு.. என்பேன்..
எப்படி .. என்பேன்..
கொஞ்ச நாளில்
நானே
சாக்ரடீஸ் ஆக
ஆகிவிட்டதாக
உணர்ந்தேன்..
பாவம் ..இந்த
மனிதர்கள்..
ஏன் என்னை
இன்னும் புரிந்து கொள்ளாமல்
"யார் இவன்"
"ஏன் இப்படி"
"என்ன மனிதன் இவன் "
என்றெல்லாம்
கேட்டு
குழம்புகிறார்கள்..?
இல்லை..இல்லை..
ஏன் ..
என்னைக்
குழப்புகிறார்கள்..?!
..
"ஏன்..?"
"எதற்காக?"
..
ஐயோ..
நான் தான்
சாக்ரடீஸ் ..
..
"ஏன் உங்கள்
காதுகளில்
இது ...
விழவே இல்லை?"