சூடு

உட்கார நேரமில்லை ஓடி கொள்கிறோம்.
நேரம் பார்த்து நேரம் பார்த்து
ஓய்ந்து கிடக்கிறோம்.
எல்லாமே எளிதாக்க கருவியா
கொட்டி வைச்சோம்.
மாதம் மாரி பொழிய வைக்க
ஊருக்கொரு கருவி செய்ய
மறந்து விட்டோம் !
கருவியெல்லாம் கக்கும் சூடா ??

சூட்டோட சூடா அதையும் தாங்கி
கொள்கிறோம்...

வெயில் பட வேணாம்
வேர்வை சிந்த வேனாம்னு
விவசாயம் விட துணிஞ்சோம்;
மரத்தை வெட்டி வீடு கட்டி
குளிருட்டுன அறைக்குள்
வாழ அறி விழந்தோம் !
வெளி வந்து பார்த்தால்
வெட்டவெளி மிஞ்சி
நிக்க,

சூட்டோட சூடா அதையும் தாங்கி
கொள்கிறோம்...

ஊத்து தண்ணீர் சோறு வடிச்ச
வைர காலம் போச்சே !
ஓட்டை போட்டு நீரேடுத்து
குடிக்க காசு ஆச்சே !
வைரம் பாஞ்ச கட்டை உடம்பு
நொந்த சோறா போச்சே !
வீட்டுவெப்பம் வெளிய தள்ளும் கருவி சூடு ஆச்சே !
வீட்டு சுத்தி மரம் இருக்கும்
வசந்தம் வீட்டு போச்சே !

சூட்டோட சூடா அதையும் தாங்கி
கொள்கிறோம்...

பரிகாரம் செய்ய சொன்னா
ரொம்ப நல்லா கேப்போம்;
பனிமலை உருகுதா செல்பி
ஒன்னு எடுப்போம் !
கடல் மட்டம் எகிறுதா
காலை தள்ளி நனைப்போம்!

நிலம் கொஞ்ச அதிருதா?
வானம் ஓட்டை விழுகுதா?

சூட்டோட சூடா அதையும்
தாங்கி கொள்கிறோம் ...............

எழுதியவர் : மு.சுந்தரபாண்டி (29-May-15, 1:10 pm)
Tanglish : soodu
பார்வை : 157

மேலே