காதல் தேசம் இன்று காம தேசம்

தடம் மாறும் காதலும்
தடம் மாற்றும் காதலும்.

காதல் தேசம் இன்று
காம தேசமாக காண்கின்றேன்,

காதல் கண்ட மாத்திரத்தில்
காதல் கொள்ளும் காலம் அன்று,

கண்ட மாத்திரத்தில்
காமம் கொள்ளும் காலம் இன்று.

பருவ வாயிலின் மறுபக்கம்
சமூக சீர்கேடும் சலனமான வாழ்வியலும்,

பூ போன்ற புனிதமான காதல் இன்று
புரள்கின்றது காதல் எது என்பதை அறியாமலே
.
காதல் செய்கிறார்கள் காதலர்கள்.
தடம் மாறும் காதல் பலரை
தடம் மாற்றவும் செய்கின்றது,

வாழ்வியலில்
சந்தித்த வரலாறு ஒன்று உரைக்கின்றேன்.

நிமிர்ந்து நின்ற மங்கையிவள்
நீதியை நிலை நாட்ட துணிந்து நின்ற மங்கையிவள்,
.
புரட்ச்சிக்காக குரல் கொடுத்து
புது யுகம் படைக்க புறப்பட்டாள் புரட்ச்சியுடன்.

வாழ்வியலின் இடையிலே
வசமாக மாட்டி கொண்டாள்.

காதல் தேசத்தில் அல்ல,
இன்றய காம தேசத்தில்,

புளுவை புனிதமான பூ என நம்பினாள்
ஆலோசனைகள் எல்லாம்
அற்த்தமற்றதாக மாறியது

கையில் குழந்தையுடன் கைவிடப்பட்டாள்
கதறியளுது கண்ணீர் விட்டாள் புரட்ச்சி தலைவி

புளு என துடித்தாள்
வீர மங்கையின் விசித்திர கனவு
காதல் தேசத்தில் சாம்பலானது
.
சீரளிந்ததும் எம் தங்கை சீரளித்ததும் எம் தம்பி.
தண்டனை யாருக்கு...?

விழித்தெளுவோம்
எம் விழிகள் நிரந்தரமாக மூடப்பட முன்னர்.

எழுதியவர் : (29-May-15, 4:14 pm)
பார்வை : 235

மேலே