அஞ்சலி – கிண்டல் வசனம்- அருணை ஜெயசீலி

................................................................................................................................................................................................

அம்மா : “அஞ்சலீலீலீ... குளிக்க வா...”

“............... ...................... ............. ...”(இனிஷியல் காது)


பாட்டி: “அஞ்சலையம்மாடி...! குளிச்சா ஜம்முனு இருக்கும்... குளிக்க வா...! ...”

“ நான் நாளைக்கே குயிச்சித்தேன் பாத்தி...!.”


தாத்தா: “அஞ்சம்மா... பொம்பளப் புள்ள இன்னுமா குளிக்கல? ”

“பொம்புலன்ஸ்தான் குயிப்பாளா?...ஆம்புலன்ஸ் குயிக்க மாத்தாளா?...!”


அண்ணன்: “ ஏ, அழுக்கு மூட்டை ! குளி போ...”

“வெவ்வெவ்வே.... ...”


அக்காள் : “அஞ்சலி எருமைமாடூடூ... குளிக்க வாடீடீடீ... ! ”

“போதி குந்து காக்கா... !” (போடி குண்டு காக்கா)


தாய் மாமா : “அஞ்சூ...குளிச்சுட்டு வா; சந்தைக்குப் போலாம்..... ”

“சைக்கிள்ள போயி சந்தைக்குப் போயி ஐஸ் கீம் வாங்கி... ”
(மாமா மடியில் நாலு நிமிடத்துக்கு பேச்சு)


பிரம்பு.. ! பிரம்புக்குப் பின்னாடி அப்பா : “அஞ்சலி....! ...”

கூப்பிடுமுன் குளியலறையில் ஆஜர்..

அஞ்சலி தட்டவே மாட்டாளாம்
அப்பா பேச்சை....!

(இனிஷியல் காது: கே.காது; சேர்த்து வேகமாகப் படிக்கவும்; நன்றி- எஸ்.வி.சேகர் அவர்கள்)

................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (30-May-15, 9:49 am)
பார்வை : 251

மேலே