கௌசல்யா -ஒரு தொடர்கதை-3
ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் பொழுது சாலையெங்கும் ஒரே
நெருக்கம் பண்டிகை திருநாள் வேறு .அப்போது சாலையின் நடைபாதையில் மக்கள் கூட்டம் சென்று
கொண்டிருந்தது .
அப்போது ஒரு பையன் வந்து ஒரு அம்மாவிற்கு உதவ வேண்டும் என்றார் .
நான் என்னவென்று கேட்டேன் .
மயங்கிய கிடக்கிறார் அவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும் கொஞ்சம்
உதவுங்களே !சரி என்று அந்த பையனுடன் சென்றேன் .
அங்கு சென்றதும் அவன் இவர்தான் அந்த பெண் என்றான்.அந்த பெண்ணை பார்த்ததும் என்
கண்கள் கலங்கின ஒரு நிமிடம் இந்த உலகமே ! இருண்டது போலே இருந்தது
அந்த பெண் என்னுடைய கௌசல்யா ...........
பின் அவளை தூக்கி வண்டியில் அமரவைத்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றேன் .
மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளித்தனர் .கண்விழிக்க நான்கு மணி நேரம் ஆகும்
என்று மருத்துவர் சொன்னார் .
நான் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தேன் .நேரம் போனது அவள் மயக்கம் தெளிந்து விழித்தாள்
நான் அங்கு சென்றேன் .அவள் அருகே அமர்ந்தேன் என்னை பார்த்து நன்றி கூறினாள்.
கௌசல்யா என்னை தெரிய வில்லையா?
நான்தான் உன்னுடைய குமார் .அதற்க்கு கௌசல்யா நான் உங்களை இன்றுதான் பார்க்கிறேன்
நீங்கள் வேறு யாரோ ! என்று எண்ணி என்னிடம் விசாரிக்கிறீங்க .....
என்ன காப்பத்துனதர்க்கு நன்றி நான் வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்...
அவள் ஏன் என்னை தெரியாதமாதிரி நடந்து கொண்டாள்.. ஏன்? என தெரிய வில்லை .........(தொடரும் )