குட்டிகள் ஆறு
எதிரில் உள்ள
காலி மனையில்
போன வாரம் ..
போட்டிருந்தது
ஆறு குட்டிகளை
அந்த கருப்பு நாய்!
இன்று காலை ..
ஆனந்தமாய் காலையில்
பால் கொடுத்தபடி
அது..!
பார்த்தபடி
நகர்ந்தேன்..
நான் அலுவலகத்திற்கு!
..
குட்டிகள் ஆறும்
சுட்டித்தனத்துடன் விளையாடும்
காட்சி..
என்னைப் போலவே
அவற்றின் தாயும்
ரசித்தபடி ..அமைதியாக!
மாலை..
குட்டிகள் ஆறும்
தாயின் முகத்தை
சுற்றி நின்றிருக்க..
அசைவின்றி கிடந்தது தாய்..
பதை பதைத்து
அருகில் சென்றேன்..
ஏதோ வாகனத்தில் அடி பட்டோ..
அல்லது மழையில் நிகழ்ந்த பிரசவமோ..
இறந்து போவதற்கு காரணமோ..
அருகில் சென்றேன்..
குட்டிகளை பரிதாபமாய் பார்த்தேன்..
என் கால் சத்தம் கேட்டு..
விசுக்கென்று தலை தூக்கி
பார்த்து ..
வாலாட்டிய தாய் நாயை
மகிழ்ச்சியுடன் பார்த்து விட்டு
திரும்பி வந்தேன்..
மனமெல்லாம் ஏதோ ஒரு நிறைவு..
நிம்மதியாய் உறங்கினேன் ..அன்றிரவு!