நாம் மனிதர் - 12253

அ-ன்பு எனும் இசையை கற்றே
ஆ-ழ்கடலின் அமைதி பெறுவோம்
இ-ருப்பதை பகிர்ந்தே மண்ணில்
ஈ-டிலா மகிழ்ச்சி கொள்வோம்...
உ-திரத்தை - ரத்த தானமாய்
ஊ-ட்டி உயிர் காத்திடுவோம்
எ-ல்லோர்க்கும் நிறை கல்வி
ஏ-ற்படுத்தி சிரித்திடுவோம்...
ஐ-யமில்லை நாம் மனிதர்
ஒ-ன்றும் நமை சாய்த்து விடாது
ஓ-ஹோ என இறையும் வியக்க
ஒழித்துக் கட்டுவோம் சாதி மதங்களையே....!!