முறிந்த மடையில் ஓர் துளி

சிறையுண்ட வாழ்க்கையின் கதவுகள் திறந்தனவே
என் வானம் அதனில் இனி நீண்ட ஓட்டம் உண்டு
கால்கள் சலித்தாலும்,
கைககள் வலித்தாலும் ...
என் மனம் இனி துவளாதே
அது தேக்கம் கொள்ளாதே...
கறந்த பாலின் சுவையோடு,
அந்த மடையான் கூட்டத்தோடு மடை திறந்து பறக்கும்..
இனி கானும் இடமெல்லாம் இன்ப தவிப்பு..
அந்த நீல கடல் அலையோடு அலைவேன்..
தரை மேல் திரிவேன்
வானோடு பறப்பேன்
காற்றோடு சிரிப்பேன்
நிலவின் மேல் சிறு செடியாய் முளைப்பேன்
ஊற்றெடுத்த ஆற்றோடு உருள்வேன்
சுவர்ண குயிலோடு குரல் ஓசை பழகுவேன்
கருங்காக்கையோடு கறைவேன்
என் உலகினுள் உயர்வு,தாழ்வு என்றேதுமில்லே
எங்கும் நீர்த்து போகாது திடங்கொண்டு நிற்பேன்
இங்கு அரும்பியதெல்லாமும் என் அவா வின் பிம்பமே.....