நான் எழுதிய பாடல்

நண்பன் 1: வேண்டாமடா! வேண்டாமடா!
காதலே வேண்டாமடா!

காதல்
தனிமையில் அழ வைக்கும்!

தவிப்புகளைத் தந்து
உயிரைச் சாக வைக்கும்!

தீராத வலிகளோடு வாழவே
இரணங்களைத் தந்து
உள்ளத்தைக் காயமாக்குமே!

ஆறுதலாய் நட்பிருக்க
ஏமாற்றங்களைத் தந்து
உயிரைக் கை விட்டுச் செல்லுமே!

நண்பன் 2: யாரோ சிலர் செய்த
பிழைகளுக்காக
காதலை தவறென்பதா?

உலகில் தாயின் அன்பிற்குப் பின்
உயர்ந்தது காதல் தானடா!

உலகில் உள்ள உயிரெல்லாம்
காதலின் அடையாளமே!
காதலுக்கும், காமத்திற்கும்
பேதம் தெரியாமல்
காதலைக் கொல்லும்
மனிதர்கள் உள்ள வரையில்
காதலுக்கு வெற்றியே கிடையாதடா!

-வே. பூபதிராஜ்

எழுதியவர் : வே. பூபதிராஜ் (2-Jun-15, 10:26 am)
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே