பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி - அவள் அப்படித்தான்
ரேணு ரேணு வையசு புல்ல காலை ல நேரமா எந்துருச்சு வாச தெழிச்சு கோலம் போடலாம்னு இல்லாம 7 மணி வரைக்கும் தூங்கரது.
அப்பா... அம்மா திட்டுதுப்பா..
ஏய்.. ஏன் புல்லைய திட்டுர போக போக எல்லாம் பழகிக்குவா...
இப்படி செல்லம் கொடுத்து கொடுத்து கெடுகரதே நீங்கதான்.
ரேணக்கா போய் பால் வாங்கீட்டு வா போ..
போ சரவணா நீ போய்டு வாடா.
ரேணு எந்திரீமா எந்திரி போய் பால் வாங்கீட்டு வா டீ போடலாம் போ..
ம்... சேரிப்பா..
ரேணு ஏ மா இவ்வளவு நேரம் பால் வாங்கரதுக்கு..
கடையில ஒரே கூட்டம் பா...
ம்... சேரி ரேணு நீ டீ போடு பாக்கலாம்,அம்மா போடுறது நல்லாவே இல்ல...
ம்... சேரிப்பா... அய் அப்பா என்னயவே டீ போட சொன்னாங்கலே.. அம்மா நீ வேடிக்கை பாரு.
இந்தாங்க பா நான் முதன் முறையா டி போட்டுருக்கேன் எப்படி இருக்குதுனு சொல்லுங்க...
சூப்பரா இருக்கு ரேணு.. உண்மையாவா சொல்றீங்கப்பா...
ஆமா ரேணு ரொம்பா அருமையா இருக்கு.
இத்தன நாளா நானுந்தா டீ போடுரேன் ஒரு நாளாவாது இப்படி சொல்லீப்பீங்கலா...
டீ நல்லா போட்டாதானா சொல்ல முடியம்...
ஆமா புல்லைய அப்படியே தூக்கி வெச்சு கொஞ்சுங்க...
அப்பா ஏப்பா அம்மாவ கடுப்பேத்திறீங்க...
இல்ல ரேணு விளையாட்டுக்கு அவ அப்படித்தான் அடுத்த நிமிசமே அன்பா
பேசுவா பாரு...
ஏ மா அப்படியா மா.. வேலைய பாருடி..
அப்பா நான் அண்ணா வீட்டுக்கு போய்ட்டு வருட்டுமா அப்பா..
ஏய் ரேணு முதல்ல இந்த துணியெல்லாம் துவைச்சுப்போடு...
அம்மா நா சாய்ங்காலம் துவைச்சுக்கிரேன் மா...
சாய்ங்காலம் வேண்டாம் இப்பவே துவைச்சுப்போடு அப்பத்தான் துணியெல்லாம் காயும்.
அப்பா... சேரி ரேணு துவைச்சு போட்டுட்டு அப்புறம் அண்ணா வீட்டுக்குப்போய்டு வா..
ம்... சேரிப்பா...
அண்ணன் வீட்டுக்குப் போரதுல அவ்வளவு குசி...
சரவணா... சரவணா... ஏம் மா...
நம்ம காட்டுக்கு போலாம் வா...
போ மா நான் வல்ல...
அந்த மாட்ட கொஞ்ச நேரம் பாத்துக்க சாமி...
அப்பா வ பாத்துக்க சொல்லு மா...
அப்பா அந்த மிளகா காட்டுக்கு மருந்தடிப்பாரு சாமி..
கொஞ்ச நேரம் தான் பாத்துக்குவேன், அப்பனா எனக்கு கல்லமுட்டாய் வாங்கித்தா..
ம்... இந்தா 2 ரூபாய் போய் வாங்கிக்க..
அக்கா... அண்ணா எங்கீங்க அக்கா...
கம்யூட்டர் ல உக்காந்திருப்பான் பாரு ரேணு.
அண்ணா என்ன பண்றீங்க...
வா பாப்பா ரெண்டு நாளா ஆளையே காணோம்.
அம்மா விட மாட்டீனு சொல்லீட்டாங்க நா,வீட்டுல நிறையா வேலை இருந்துச்சு...
ம்... எல்லாம் முடிஞ்சுச்சா...
இன்னைக்கும் போக வேண்டானு சொல்லி இருப்பாங்க எப்படியோ அப்பா கிட்ட சொல்லீட்டு
சீக்கிரமா துவைச்சுப் போட்டுட்டு வேகமா வந்துட்டேன்..
ம்... சாப்டயா பாப்பா..
சாப்டாச்சு நா..
எவ்வளவு சாப்பிட்ட.. ரெண்டு இட்லி, சரவணா எவ்வளோ சாப்பிட்டான்.
அவன் அஞ்சு இட்லி சாப்பிட்டான்.
பாரு தம்பி அஞ்சு இட்லி அக்கா ரெண்டு இட்லியா...
அதெல்லாம் அப்படித்தான் நா..
ம்.. சேரி பாப்பா.. அப்படியே ஒல்லி பல்லியாவே இரு.
சரவணா எங்க பாப்பா..
அவ காட்டுக்கு போய்ட்டான் நா..
வருவானா.. தெரியல..
அண்ணா... இப்பத்தான் டா உன்ன கேட்டுட்டு இருந்தேன் அதுக்குள்ள வந்துட்ட,
எங்கடா போன..
போனா நோவ், காட்டுல மாடு மேய்க்க சொல்லீட்டாங்க நா..
மேய்ச்சாச்சா...
கொஞ்ச நேரம் மேய்ச்சுட்டு தண்ணிகாட்டி கட்டீட்டு வந்துட்டேன் நா..
ம்... அப்பா திட்ட போரார் டா..
அதெல்லாம் திட்டமாட்டாங்க நா.. ம்... சேரி சரவணா..
அண்ணா படம் பாக்கலா மா..
சரி வா பாக்காலாம்.
புதுசா என்ன படம் இருக்கு நா..
காஞ்சனா இருக்கு பாக்கலாமா..
நோவ்.. எப்பனா வாங்கீட்டு வந்தீங்க..
நேத்து தான் சரவணா..
பாப்பா காஞ்சனா பார்க்க வல்லயா..
யார் சொன்னது முதல் ஆள் நான் தான்..
என்னவொரு சந்தோசம் பாரு..
பாப்பா அடுத்த வாரம் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுருவாங்க..
ஆமா நா ச்சே.. நீங்கலும் டியூசன் எடுக்க மாட்டீங்க.. போங்க அண்ணா..
அண்ணா காலேஜ் போக வரைக்கும் எடுத்தேன் இனி வேலைக்குப்போகனும் ஆச்சு..
போங்க அண்ணா, வேலைக்குப் போகாதீங்க டீயூசனே எடுங்க..
இல்ல பாப்பா அண்ணா வேலைக்குப்போய்தான் ஆகனும்.
இவ்வளவு நாள் வீட்டுக்குப் பக்கத்துலையே பள்ளிக்கூடம் இருந்துச்சு இனி
ஒன்பதாம் வகுப்பு வந்தாச்சு பஸ் ஏரி பொள்ளாச்சி போய் படிக்க போரீங்க...
ஏ நா ஓட்டுரீங்க..
இல்ல பாப்பா இத்தன நாள் இந்த ஊருக்குள்ளேயே இருந்த ஆனா இனி உனக்கு
கொஞ்சம் வெளிய சுத்தி பார்க்க வெளியுலகம் தெரிஞ்சுக்க வாய்ப்பு கெடச்சிருக்குனு
சொல்ரேன் பாப்பா..
ஆமா.. நா .. இருந்தாலும் எனக்கு இந்த பள்ளிக்கூடம் நீங்க எடுத்த டியூசன் இதெல்லாம் தான்
பிடிச்சிருக்கு நா..
இருந்தாலும் வெளியபோய் பார்த்தால் தான் உன்னோட வாழ்க்கை இன்னும் பெரியதா தெரியும்..
ம்... சேரி நா...
சரவணா அந்த செல்போன கொண்டா..
இரு நா இன்னும் கொஞ்சநேரம் விளையாண்டு தர்ரேன்...
டேய் அதுல ஜார்ஜ் இல்ல டா..
அதெல்லாம் இருக்குது நா..
சேரி என்னமோ பண்ணு..
பாப்பா வா சாப்பிட்டு வர்லாம்.
இல்ல நா நீங்க போய் சாப்பிட்டு வாங்க.
நீயும் வா,சரவணா வாடா சாப்பிட்டு அப்புறம் விளையாடுவயாமா..
அண்ணே நீங்க போய் சாப்பிடுங்கணே..
சேரி அப்படினா நானும் அப்புறம் சாப்பிட்டுகிறேன்..
படம் முடிய போகுதா..ஆமா நா.
ச்சே அதுக்குள்ள படம் முடிய போகுது வீட்டுக்குப்போகனும்..
ஏ பாப்பா வீட்டுக்குப்போகலயா..
ஆமா நா.. நா போகல, இன்னும் கொஞ்ச நேரம் இருக்கேன்..
ம்... சேரி பாப்பா..
ரேணே....,சரவணா...
பாப்பா அம்மா கூப்பிடுராங்க பாரு..
இரு மா வர்ரேன்..
அண்ணா போய்டு வர்ரேன் நா...,அண்ணா போய்டு வர்ரேன் நா...
ம்... சேரி பாப்பா, சேரி சரவணா..
அவளும் அப்படித்தான்,அவனும் அப்படித்தான், அண்ணன் கூட இருந்தால்
போதும் வேறு எதுவும் கண்ணுக்கு தெரியாது..
இந்த கோடை விடுமுறையில் கண்ட இப்பெரும் மகிழ்ச்சி வேறு எப்போதும் கண்டதில்லை..
இது எனது சொந்த படைப்பு என்பதை உறுதி செய்கிறேன்.
ஆ.சத்தியபிரபு
2/16,ஆலாம்பாளையம்,
ஏரிப்பட்டி(தபால்),
பொள்ளாச்சி(),
கோவை.
642205.
தொலைபேசி எண்:9865995396