சூப்பரா நடிச்சிக்கிட்டிருக்காரு
ஒருவர் : நீங்க சின்னவீடு செட்டப் பண்ணினதுக்கு உங்களுக்கு உறுதுணையா இருந்தது உங்க மனைவி தானா..! என்ன சொல்றீங்க?
மற்றொருவர் : நெசந் தான்! தண்ணி போட்டு இந்த வீட்டுக்குள்ளே வராத! வேற எந்த வீட்டுக்குனாலும் போ.!!ன்னு என்னை டெய்லி உற்சாகப்படுத்தினதே அவ தான்.
-------------
சபா நிர்வாகி : இந்த வருட சிறந்த நடிகருக்கான விருதை யாருக்கு குடுக்கலாம்ன்னு ஒரு யோசனை சொல்லுங்களேன்.
ஒருவர் : எங்க தொகுதி எம்.எல்.ஏக்கு குடுத்திருவோம். அவர் தான் நாட்டுக்கு நல்லது பண்ணுற மாதிரி சூப்பரா நடிச்சிக்கிட்டிருக்காரு.