மௌனமாய்...அழுகிறேன்
வாசமில்லா மலர்
இங்கே...நட்பின் சுவாசம்
தேடுகிறது...
காயம் மட்டுமே
பட்டுக்கொண்டிருக்கிற மூங்கில்
இங்கே...நட்பின் கானம் பாட
அலைகிறது...
நட்பிற்க்காய் உண்மை உணர்த்த...
தீயில் விழுந்த
விட்டிலாய் துடித்து...
மௌனமாய்...அழுகிறது
ஊமை உள்ளம்...