வசந்தகாலம் ஐரோப்பா

வசந்தகாலம்
""""""""""""""""""
ஈர விரகில் எரிபொருளை
எறிந்து எரியும்
தற்காலிக தீச்சுவாலையாக"""
வந்து போன சூரிய
வெம்மையில்
கரைந்து ஓடும்
பனிப்படலங்களுக்குப்பின்னால்"""
பயம் தெளிந்து முகம்
காட்டும்
பூம்பெய்திய புல்லினங்களின்
புன்னகையும்!
கூதல் நடுக்கத்தில்
சிறகு விரித்து
சூடு குளிக்கும் பறவைகளும்!
இலையில் ஒட்டிய
பனிக்கட்டி களங்கங்கள்.
காற்றின் தழுவலில்
கானமல் போகும்
கணப்பொழுதுகளில்,
கிளையின் வெட்கமும்!
மரத்தின் பெருமிதமும்!
தெருவோர வாய்காலில்
தோற்றுப்போய் வழிந்தோடும்
சிறிய பனிச் சிதறல் களை
ஆதங்கத்துடன் பார்க்கும்,
வாத்துக்குஞ்சுகளும்!
இவையே நிரந்தரமாகி
மரங்களில் இளமை துளிர்த்து
வசந்தகால சடங்குக்கு
ஆயத்தமாவோம்
லாஷிகா
""""""""""""