என்னவனே
என்னவனே ..........!!!!!!! என் விடியலாய் வந்த சூரியன் நீ...
என்னவனே ..........!!!!!!!
என் விடியலாய் வந்த சூரியன் நீ ,
என் இரவோடு வந்த நிலவு நீ ,
என் இதழோரம் வந்த புன்னகை நீ ,
என் விழியோரம் வந்த வெட்கம் நீ ,
என் குழலோரம் வீசிய வாசம் நீ ,
என் கரமோடு இருக்கும் ரேகை நீ ,
என் செவியோரம் கேட்கும் இசையும் நீ ,
என் துயிலோடு வந்த கனவும் நீ ,
என் மனதோடு தோன்றிய கவிதை நீ ,
என் மனதோடு வாழும் நினைவும் நீ ,
என்று நீ அறிந்தபோது
உன் இதழோரம் வந்த புன்னகை நான்தான் .........
என் மனதோடு இருக்கும் வலியும் நீ ,
என்று நீ அறியும்போது
அன்று உன் விழியோரம் வரும் கண்ணீரும்
நானாகதான் இருப்பேன் …
அப்போதும்
உன் கண்ணீரை துடைக்கும்
இரு கரமும் என்னுடையதாய் தான் இருக்கும்,,,,
உன் கண்ணீரை கண்டதும்
உன் முகத்தை சாய்த்துகொள்ளும்
மடியும் என்னுடயைதாய் தான் இருக்கும்,,,,,,,,,
காரணம்,,,,,,,,,,??????
நான் உன் அன்பை மட்டும் சுமக்க
உன்னை நேசிக்கவில்லை ,
உன் மனதோடு வரும் வேதனைகளையும்
ஒரு தாயாய் சுமக்கவே
உன்னை நேசித்தேன் ….!!!!!!!!!!