அக்கினி பிரவேசம்

பாரதி .....உன்னின்ஆள் சுட்டும் வி்ரலை ஆழமாய் பிடித்தேன்...

அது விரல் ஆகாது.....

எனதென்று வளர்ந்த, வஞ்ச மடமையை உடைத்த பிஞ்சு கனை...

பிரபஞ்ச விசித்திரம்

வானை ஒட்டி உடையும் கன மின்னல்...

நீ தொட்டு நிமிர்த்திய தனல் வார்த்தைகளில்......

நீ கொட்டி பெருக்கிய உணர்வின் ஓட்டங்களில்........

கண்ணும்,நெஞ்சும் தாளாது துடித்து...
என் விண்ணை புடைக்கிறது..

கர்வ செறிவு மச்சை தாண்டி ..முன் மார்பின் மதகை உடைக்கிறது...

ஸ்ரீ மான் சுப்ரமணிய பாரதி...
இதை கொட்டி உதிர்த்தெந்தன் வாசர் தோரணமாக்கிடவே...

என் முகப்பு ...முகம் காட்டி
முளைக்கிறது...

பாரதி என்ற தேள் கொட்டி எழுந்த விஷமதில்...

மடமையும்,பேடிமையும்
கால் விட்டு நகர்ந்தன..

தூர கிரணங்கள் மூண்டு,
சுருங்கிய நெற்றியை மீட்டன,
வலு பட்ட ஜாடையை வார்த்தன.....

நடக்கும் நடையிலே புதுமை கொண்டு,
நாவின் பாஷையிலே இனிமை கண்டு....
என் வாழ்வென்ற வானை திறந்தேன்...

அங்கே...

கையின் வீச்சிலும்,
அறிவின் பேச்சிலும் முன் அமர்ந்தவன் அந்த பாரதி

வீம்பு கனவு...விரத களவு
தீர்வதில்லை,
தீர்வதில்லை
எங்கள் களியாட்டம்,
இன்ப களியாட்டம் சொல்லி மாய்வதில்லை..

எதை கானினும்,எங்கு நோக்கினும் இன்பமடா....

எழுதியவர் : சிவசங்கர்.சி (6-Jun-15, 8:06 am)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
பார்வை : 107

மேலே