அஃறிணை

விருப்பமில்லா குழந்தை
வளர்ப்பவர்களுக்கு அஃறிணை-அது
அழுதுட்டு இருக்கு..
கர்வம் கொண்ட கணவனுக்கு
மாசில்லா மனைவி கூட அஃறிணை -அது
சமைச்சுட்டு இருக்கு ..
ஆணவம் கொண்ட அதிகாரிக்கு
தனக்கு படிஅளக்காத பாமரன் அஃறிணை -அது
இன்னும் போகலையா?
கல் கடவுள் ஆகியது
உயர்திணையில் அழைக்கிறோம்..
மனிதன் என்னவாகினான் ?
அஃறிணையில் அழைப்பதற்கு!