இதழ் பரிசு முத்தம்

மெதுவாக இதமாகத்
தூவுது வானம்
புதிதாக ஒரு கவிதை
சொல் தோழா !

வேனில் மறைந்த
முகில் பொழியுது
வான் அமுது
மானில் பயின்ற
விழி அசைய
தேனில் நனைந்த உன்
இதழ் அசைய பொழியுது
புன்னகை அமுது !

இன்னும் தரவில்லை என்றால்
வருந்துவாய் தோழா நீ
இதோ......
இதழ் குவித்தாள்
உள்ளங்கை ஏந்தினாள்
பரிசாகத் தந்தாள் ஒரு முத்தம்
காற்றினில்
____கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jun-15, 5:05 pm)
பார்வை : 128

மேலே