நினைவுகள்

உன்னை கண்டதும் காதல் வந்தது
காதல் வந்ததும் கவிதை பிறந்தது
கவிதை பிறந்ததும் கவலை ம(றை)றந்தது

கண்கள் மூடாமல் கனவு காண்கிறேன்
கனவின் மூலமே நான் உன்னை காண்கிறேன்
என்று தீருமோ எனது தாகமே
எங்கு பொழிவாயோ சொல்லு மேகமே

உனது பார்வையால் உருகிப்போகிறேன்
உருகிபோவதால் மெழுகு நானடி
உனக்காகவே
உருகிபோவதால் மெழுகும் நானடி
உணர்ந்து கொள்வாயோ என் உயிரும் நீயடி
உணரவில்லையேல் காய்ந்த சருகு நானடி

என்னை கடந்து போவதால் மனமும் உடைந்து போகுதே
தினமும்
என்னை கடந்து போவதால் மனமும் உடைந்து போகுதே
தினமும்
தீண்டி சென்றிடும் தென்றல் நீயடி
வேலியைத் தாண்டி வளர்ந்திடும் பயிரும் நானடி

என்னை சமைத்து சுவைத்திடும் தேனும் நீயடி
கசந்து போகுமோ நம் காதல் தானடி

உன்னை கண்ட பின்புதான் உடலில் உயிரும் ஓடுது
உன் உதட்டின் அசைவினால் என் தேகம் குளிருது

அழிந்து போய்விடும் இந்த உலகில் தானடி
அழியாத பொருளை நம் காதல் வளருது

நீ சூடும் பூக்கள் தான் வாடிப்போகையில் வருத்தம் ஏனடி?
வாடாத பூக்களோடு உன்னை தேடி வருகிறேன்
உன் வாசல் நானடி

வண்ணப்பூவே நீ வாசம் வீசடி
நான் சுமந்து சென்றிடும் என் சுவாசம் நீயடி

எழுதியவர் : ச.ஐயப்பன் (8-Jun-15, 7:27 pm)
சேர்த்தது : ஐயப்பன்
Tanglish : ninaivukal
பார்வை : 81

மேலே