தாளம் தப்பா கவிதை

காற்றிற்காக
வலைச் சன்னலைத்
திறந்து விட்டேன்
காற்றுடன் வந்து
காதினில் சாக்ஸ் ( SAX )
வாசித்தார் இசைக் கலைஞர்
என்ன பரிசு கொடுக்கலாம்
இசைவாணருக்கு என்று
யோசித்தேன்
தாளப் பரிசுதானே சரி என்று
இரு கைகளினாலும் வழங்கினேன் !
பி. கு . : கவிஞரின் செயலை வழக்கு மொழியில் சிந்திக்கக் கூடாது.
அது கவிஞருக்கு செய்யும் மரியாதை இல்லை
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jun-15, 7:27 pm)
பார்வை : 112

மேலே