நடுவுல கொஞ்சம் வெக்கத்தைக் காணோம்

நடுவுல கொஞ்சம் "வெக்கத்தைக்" காணோம்
===================================================ருத்ரா


நேற்று நான் எழுதிய கடிதம்
அவளுக்கு கிடைத்திருக்கும்.
என் மனப்படம் விரிகிறது.
அவள் என்னிடம் பேசுவாள்.
ரோஜா தாமரை சண்பகம் அல்லி
ஆகிய பூக்கள்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
என்றெல்லாம் பூத்து
அவள் கன்னத்தில்
ரவிவர்மாவின் ஓவியமாய்
குழைந்து நிற்கும்.
நிலம் நோக்கி
கால் விரல்களால்
அரைவட்டம் போட்டு
குறிப்பாய்
காதலின் "யூக்ளிட் ஜியாமெட்ரியாய்"
ஒரு குமுக்குச்சிரிப்பு சிரிப்பாள்.
நினைக்கும்போதே சிலிர்த்தது.
..அதோ ...அதோ வந்து விட்டாள்.
என் அருகில்
நிலவு முகம் வெள்ளி அருவியாய்...
என்ன செய்யப்போகிறாள்.
"ஐ லவ் யூ டா" என்று
சொல்லி முடிக்கும் முன்னேயே
என் முகத்தோடு அவள் முகம் சேர்த்து
இழுத்துப்பிடித்து அச்சடித்தாள்.
இதழ்கள் இச்சானதில்
எங்கோ ஒரு க்யூஜியமாவில்
பூகம்பம் ரிக்டரில் பத்து பன்னிரென்டு இருக்கும்.
நான் தூளாகிக்கிடந்தேன்.
கால் வேறு கை வேறு சிதிலமாய்
இடிபாடுகள்.
என் இதயம் துள்ளி துள்ளி துடித்து
எங்கோ கிடந்தது.
"அச்சம் மடம்...."
அந்த நாலு வார்த்தையை அவளிடம் கேட்டது.
"போடா ஃபூல்"..
நுரை விலங்கு பூட்டி
பொன் கூண்டுக்குள் அடைத்து
சிறகுகள் வெட்டி எங்களுக்கு
கிச்சு கிச்சு மூட்டியதெல்லாம் போதும்.
"ஹா ஹா ஹா ஹா"
காதலின் புதுயுகக் காளியாய் நின்றிருந்தாள்.
"சிதறிக்கிடந்தது போதும்!
ம்ம்ம் எழுந்திரு.."
கை கொடுத்து என்னைத் தூக்கினாள்.

====================================================

எழுதியவர் : ருத்ரா (10-Jun-15, 4:43 am)
பார்வை : 105

மேலே