காற்றாலை போல

காற்றாலை போல வீசும் உன் கூந்தலில்...,

அங்கு ஓய்வெடுக்க கேட்கும் உன் மடியினில்...!

ஒவ்வொன்றாய் திறக்கும் உன் பற்களை...,

கொத்தாக அள்ளி செல்ல ஆசை...!

பூமியில் முத்தம்மிட்டு செல்லும் உன் கால்களை...,

சத்தம்மில்லாமல் பின்தொடரும் என் மௌனங்கள்...!

வெத்துப் பார்வைகள் உன்னோடு...,

வேடிக்கை என்றும் தெரிந்தும் முன் செல்லும் கண்கள்...!

வட்டமிடும் உன் பார்வையில்...,

பல வானவில்லை உள்ளடுக்கும் கோளங்கள்...!

சலங்கை ஒலி எழுப்பும் உன் கொழுசின் சத்தம்...,

நடு ஜாமத்தையும் பகலாக்கும் யுத்தி...!

மின்னல் வெட்டும் உன் கன்னங்கள்...,

என்னை தூக்கி போட செய்யும் மந்திர ஜாடை..!!!

எழுதியவர் : காந்தி (10-Jun-15, 9:45 am)
Tanglish : kaatraalai pola
பார்வை : 103

மேலே