தோசை 1 பை 2
வட்டமாய் சுட்டுவைத்து
தட்டிலே பரிமாறி
திட்டமாய் பகிரப்பட்ட நான்
இருவருக்கும் உணவானேன்
இடவலமாய் இதயம் உரசி
இதழ்வழியாய் ஊட்டப்பட
இரைப்பையை தேடுகிறேன்
வலப்புறமாய் நுழைந்த நான்
இடப்புறமாய் வந்ததெப்படி
அவ்விடம் நுழைந்த என் பாதியே
நீயும் இப்படித்தான் மாறிப்போனாயோ?