அட்டிமுத்தம்

இதயம் நிறைத்தாய்
இடமே நிறத்தாய்
விரல்களுக்கு விடயமுமானாய்
என் மடிசாய்ந்து நீ
மயங்கிக்கிடந்த போழ்து
உன்னிடமாய் நான்
உறைந்தே போயினேன்
தட்டிமுட்டி பொங்கிச் சரிந்தவுன்
போர்வையிலா அழகினில்
தங்கிக்கிடந்தேனடி
ஒட்டிக்கிடந்தபடி கட்டித்தந்த
அட்டிமுத்தம் தனை தின்றுகளித்தேனடி
உன்னுடல் தொட்டுக்கிடக்கும் இன்னொரு
உடையாய் எனையும் இன்றுணர்ந்தேனடி

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (10-Jun-15, 12:19 pm)
பார்வை : 83

மேலே