சஹாரா

கல்லும்,
முள்ளும்,
செத்த மிருகங்களும்,
சேமித்த குப்பைகளும்
விரிந்து வாழும்
விசித்திர பூமியிது..!
பூக்கள் பூக்க
செடிகளில்லை !
பனித்துளி தாங்க
புல்லின கிளையுமில்லை..!
பட்டாம் பூச்சிகள்
விக்கி தவிக்குது ....
தென்றலும்
செடி கொடி உரசி
கவிதை பேசி
தித்திக்க முடியாமல்
நா வரண்டு
தீயாகி தரிசாகி
திசை முட்டி தடுமாறுது !
மாத நிலா
வந்தாலும் வாடுது
வருடம் கடந்து
வந்து போக எண்ணி ...!
எத்தனையோ
வலி தாங்கும் என் இதயம்
தேத்தி கொள்ளுது
அமைதியையும்
இதமான ரசனையும் அனுபவிக்க!