இன்றைய செய்தி
இன்றைய செய்தியில்
இனியவை ஏதுமில்லை
ஆட்சியை எதிர்த்தங்கே
ஆர்பாட்டம் போராட்டம்
குற்றங்களின் பட்டியல்
குறுதிக் கொப்பளங்கள்
மாதர்கள் கொடுமைகள்
மடமைகளே முதன்மைகள்
ஏமாந்தவர் எண்ணிக்கையில்
ஏகமாய் ஏற்றங்கள்
ஏனிப்படி இவையெல்லாம்
ஏகமாய் பெருத்திருக்கு
மானிலத்தில் நல்லவைகள்
மானுடர்தாம் செய்வதில்லையோ?
மாற்றிடவே மார்கம் வேறு
மனதில் ஒன்றுமில்லையோ?
எங்கோ ஒர் அசரீரீ
என்னிடம் கூறியது
ஒற்றை வரியிலே
ஊடகத்தை ஊமையாக்குங்கள்
உயிர்த்தெழும் உண்மைகள்
உண்மைகளை மறைக்கும்
ஊடகங்கள் இங்கெதற்கு...?
சாதனைகள் மறைத்தங்கே
வேதனைகள் தாங்கிவர
போதனைகள் மூர்க்கத்தால்
பேதங்களை ஓதி விடும்
ஊடக மூடத்தை ஒழித்தாலே
சாதனைகள் முன்னெடுக்கும்
வேதனைகள் பின் தள்ளும்!
------முரளி