கண்ணன் என் காதலன்
காதல் இடி போன்றது. சத்தமாக பயமுறுத்தியே கொள்ளும். மறந்து போன வார்த்தை ஒன்று தொண்டையில் சிக்கி தவிக்க வைத்து நினைவிற்கு வரும் வரை இருக்கும் துடிப்பு போல் இருக்கும் காதல் சொல்லும் வரை பனித்துளி சொல்லிவிட்ட பின் கடல்.
மனசு படபடக்க கிளாஸ் ரூமிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். பார்கிங்கில் ஐயோ அவனை பார்த்துவிட்டேன்.
என்னை பார்த்ததும் அவன் முகமெல்லாம் பளீர்.
"என்ன மேடம், சோர்வாக தெரியறீங்க" அவன்.
என்னை பேச விடவில்லை, தொடர்ந்து அவனே "இந்த ப்ரவீன் இருக்கேன் நீ ஏன் கவலைபடறே" என்றான்.
"டேய் நீ தான் கவலையே" என்றது என் மனசு. சிரித்து வைத்தேன். நேரம் பார்த்து உள்ளே நுழைந்தான் விஷ்ணு. "மூவ் பிளிஸ் " என்று சொல்லிக்கொண்டே.
ப்ரவீன் பரபரப்பானான், "ஏய் போ போ பேச்சு கொடு போ " என்றான்.
சங்கடமாகி போனது. தயங்கி தயங்கி நின்றேன். துள்ளி குதித்து கொண்டு டூட் (dude) போயாச்சு.
ப்ரவீன் ,"மக்கு பேசி ப்ரெண்ட் ஆனால் தானே மேற்கொண்டு எதுவானாலும்..." என்றான்.
இரண்டு பேரும் பேசியப்படியே கிளாஸ்ரூமிற்கு நடந்தோம். வழி முழுக்க அவன் தான் பேசினான். பிரவிணிற்கு பேச பிடிக்கும் மனதில் உள்ளதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பான். யமஹா க்ரக்ஸில் காலேஜ் வருவான். பழைய வண்டி புதிதாக வைத்திருப்பான். அதை குறை சொன்னால் அவனிற்கு பிடிக்காது. வண்டி, கிரிகெட், பானிபூரி, இதுவெல்லாம் அவனின் இஷ்டம். பிடிக்காது என்று அவன் சொல்லி கேட்டது கிடையாது. கனவுகள் நிறைய உண்டு, அதை பற்றியே அவன் எண்ணங்கள் செயல்ப்படும். முக்கியமாக ப்ரொபசர் முதல் கேட்டில் இருக்கும் செகுரிட்ரி தாத்தா வரை எல்லாருக்கும் அவனை பிடிக்கும். சுருங்க சொன்னால் "இவன் ரொம்....ப நல்லவன் ".
பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு என்று ஆரம்பித்து கிரிகெட் பற்றிய ஒரு விவாதத்தில் கிரிகெடிர்க்கு நான் ஆதரித்து பேச அவன் நட்பு தொடங்கியது.
நிறைய விவாதங்கள். சின்ன சின்ன சண்டைகள். நாட்கள் நகருது தெரியாமலே போனது.
விஷ்ணு, ஒரு வினோத ஜீவன். எல்லாருக்கும் அவனை பிடிக்க வேண்டும் என்று பாடுபடுவான்.அழகன். கொஞ்சம் வெயிட் பார்ட்டி. வாரத்திற்கு ஒரு காரில் வருவான்.
"ஹேய், கசின் போன வாரம் தான் வாங்கினான் மச்சி" என்பான். நிறைய புகைபடங்களை போனில் காட்டி சிரிப்பது இவனிற்கு பொழுதுபோக்கு.
சட்டென்று ஒரு நாள் "உனக்கு விஷ்ணு மேல் ஒரு கண்ணு தானே " என்று கேட்டான் ப்ரவீன்
பட்டென்று "ஆமாம் " என்றேன்.
அவன் "உனக்கு நான் ஹெல்ப் பண்றேன்" என்றான், அன்று தொடங்கியது இந்த தலை வலி.
காலேஜ் முடிந்து செல்கையில் விஷ்ணுவை தொடர ப்ரவீன் பைக்கில் செல்வேன். வீக் எண்டில் மால், தியேட்டர்களில் பார்ப்போம்.
என் முயற்சிகளில் உறுதுணையாக நிற்கும் பேர்வழியாக ப்ரவீன் கூடவே நிற்பான், வருவான். சமயங்களில் அவன் தேவைக்கு, என் தேவைக்கு என்று ஒன்றாக போவதும் வருவதும் பழக்கமானது.
சில நேரத்தில் ப்ரவீன் "மச்சி உனக்கு ஈர்ப்பு, கவர்ச்சி, ஆசை, காதல் இதற்கெல்லாம் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும்" என்பான்.
பொறமையோ ?? இருக்கட்டும் இருக்கட்டும். மனம் குளிரும் எனக்கு. அவன் மீதி பேச்சு காதிலே விழாது.
இப்படி நாட்கள் சென்று கொண்டிருக்க, ஒரு சாயங்கால வேளை இருவருமாக சேர்ந்து சென்றிருந்த கடையில் பெண்ணொருத்தி "அண்ணா இதை அக்காவிற்கு வாங்கி கொடுங்க அண்ணா, நல்ல இருக்கும்" என்றாள் கையில் இருக்கும் இதய வடிவு குஷனை கொடுத்து. வியாபாரம் செய்ய அவள் சொன்னாள். இறுக்கமாக மாறினவன், அதன் பின் அவன் ஹெல்ப் செய்யும் எண்ணம் துரிதமாகி போனது.
விஷ்ணு வருவதை தூரத்திலே பார்த்தவன். இருவருமாக அமர்ந்திருந்த மேசைக்கு அவனை அழைத்தான்.
ப்ரவீன் "மச்சி, இன்னைக்கு நீ வந்திருக்கும் கார் கலர் சூப்பர் " என்றான். பேச்சு தொடங்கியது. இல்லை விஷ்ணுவின் பீத்தல் தொடங்கியது. பொறுமையாக கேட்டிருந்தவன் , "மச்சி இவள் எதோ தனியாக பேசனுமாம், நீங்க பேசுங்க நான் கை கழுவிட்டு வரேன் " என்றான்.
நெஞ்சுக்குள் சுனாமி தொடங்கியது. தொண்டை வறண்டு போயிற்று. இதயம் துள்ள தொடங்கிவிட்டது. அவனை நிமிர்ந்து பார்த்தேன். குமட்டியது. பேச தொண்டங்கினேன் "விஷ்..னு ... " என்றேன். அப்போதும் போல் அவன் பேசினான் "எய் கூல்.. ஐ நோ யு ஹவ் பீலிங்க்ஸ் பார் மீ" என்று கை நீட்டி தோள் தீண்ட எத்தனித்தான், அனிச்சையாக விலகினேன். அவன் "வாட் பட்டி " என்றான். கை பிசைந்தேன். தைரியம் கூட்டி "அவன் லூஸ் விஷ்ணு, உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டான் சாரி" என்றேன்.
விஷ்ணு "ஏய் நேற்றே எனக்கு என் க்ரூப்பில் சொன்னாக யு ஆர் கிரேசி அபௌட் மீ என்று " என்றான்.
இதற்க்கு மேல் விட்டால் தாங்காது . பேசினேன். " விஷ்ணு ஐ அம் சாரி எனக்கு இஷ்டமில்லை, உன்னை காயபடுத்தினதற்க்கு சாரி " உளறினேன்
அவன் "அப்போது ப்ரவீன் சொல்ல வந்தது என்ன "
எனக்கு சங்கடமாக இருந்தது. முழித்தேன். அவன் இந்த முறை அழும் குரலில் "நான் எங்கு இருந்தாலும் அங்கு நீயும் இருந்தாயே, நீ என்னை பாலோ செய்யலை ?? " என்றான்.
இல்லை என்று தலை மட்டும் ஆட்டினேன்.
அவன் கோபமானான். நான் தனியாக எங்கும் நீ இருக்கும் இடத்தில்லெல்லாம் சுற்றவில்லை என்றேன். அவன் எழுந்து சென்று விட்டான்.
தூரத்தில் நண்பன் ஒருவனிடம் பேசுவதுப்போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தவன் அருகில் வந்தான் கட்டை விரலை உயர்த்தி "சக்சஸ் " என்றான்.
ஆத்திரமாகி போனது பேசாமல் விலகி சென்றேன். ப்ரவீன் தோள்களை குலுக்கிவிட்டு அகன்றுக்கொண்டன். சமிப காலத்தில் கூடியிருந்த நம்பிக்கை கண்டது.
சகஜமாக பேசும், எப்போதும் ஒரே நிலையில் ஆணுக்கே உரிய தன்னம்பிக்கையுடன் பெண்ணுக்கு மரியாதை கொடுக்கும் ஒருவனை சந்தித்து புரிந்து கொள்ளும் வரை விஷ்ணு அழகனாக தெரிந்தான்.
ஏன் அவனிற்கு மட்டும் அவன் கனவுகளையும் முயற்சிகளையும் விரும்பும் தோழி தெரியவில்லை கருத்தில் பதியவில்லை, பிற தோழிகளுடன் விஷ்ணுவை கிண்டல் செய்யும்பெண்ணாக மட்டும் கண்ணில் தெரிந்தேன். அறிவு கெட்டவன். ஆசைக்கு, அன்பிற்கும், கிண்டல், கேலிக்கும் வித்தியாசங்கள் தெரியாதவன்.
உள்ளுக்குள் எண்ணங்கள் சுனாமி போல் பொங்கியது. நியாயம், நேர்மை, பாசம், சரி தவறு என்று பார்ப்பவனிடம் நேரே போய் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது இந்த நட்பும் அக்கறையும் துணையும் ஆயுள் முழுக்க வேண்டும் என்று சொன்னாலோ வெளிப்படுத்தினலோ இருக்கும் உறவும் கெடும். எங்கேயோ உள்ளுக்குள் இருக்கும் ஆசை திட்டம் கொடுக்க செயல்ப்படுத்தினேன். ஆனால் ஐயோ எல்லாம் பாதியில் கெட்டு குட்டி சுவராக போனது.
மாலை திரும்புகையில் தனிமை அவசியமாக இருக்க ப்ரவினை தவிர்த்து நடந்தேன். வழியில் குறுக்கே வந்து நின்றான் விஷ்ணு. சரளமாக பாடினான். " உன்னை போய் நம்பினேன் பார், ஏன் டி நான் போகும் எடமெல்லாம் வந்து நடித்த?? ...... " என்று சில நேரம் மூச்சு வாங்கி பேசினான்.
கடவுளே இவன் இப்படி இடையில் காயப்படுவான் என்று நினைக்கவே இல்லை. இந்த வருத்தம் இன்னமும் நெருஞ்சி முள் காடாக ரணம் கூட்டியது இதயத்தில்.
இங்கே இந்த நாட்டில் பெண் மனம் திறந்து ஆசையை சொன்னால் அதற்க்கு அர்த்தமே வேறு. இதயம் சறுக்கி விழுந்தது ஆசையில் , மூளை பயன்ப்படுத்தி ஆசையை நிறைவேற்றி கொள்ள பார்த்தேன் என்று சொல்லவா முடியும்.
விஷ்ணு திட்டி முடித்து நேராக ப்ரவீன் வண்டி அருகே சென்றான். அங்கே அவன் புறபட ஆயத்தமாகி நின்றிருந்தான். என்னை கை காட்டி விஷ்ணு கோபமாக எதோ சொன்னான். உடனே ப்ரவீன் முகத்திலும் கோபம். பயம் பளு மனதில் ஏறிக்கொண்டே செல்ல நடக்காமல் ஓடினேன்.
"ஏய் நில்லு" பிரவீன்.
நான் "இன்னைக்கு ஏதும் வேண்டாம்"
"என்ன இப்படி அவாய்ட் பண்றீங்க , கஷ்டமாக இருக்கு, அவன் ஷி இஸ் மைன், ஸ்டே அவே என்கிறான், நீயும் பேசாமல் போகிறாய் " என்றான்.
நிலைமை புரிந்தது.
நான் "அப்படி எல்லாம் இல்லை , நீ கிளம்பு " என்றேன்.
"நீயும் வா எப்போதும் போல் போகலாம் " என்றான்.
எப்போதும் போல் பேச தொடங்கினான்," இப்படி செய்யாதே, நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா ? எனக்கு அந்த விஷ்ணுவை பிடிக்கவே இல்லை , நீ எதற்கும் யோசி" என்றான்.
தைரியம் கூட " என்ன ப்ரவீன் இதில் என்ன பீல் பண்ண இருக்கு " என்றேன்.
அவன் "ஏய், நல்லா யூஸ் பண்ணிக்கிட்டு கழட்டி விடற பார்த்தியா ??" என்றான்.
எனக்கு மனம் தூள் தூளாக உடைந்தது. கோபம் கொந்தளித்தது. முட்டாள் மேல் ஆசை பட்டு விட்டோம் என்று எண்ணம் தோன்றியது. கனமான மனம் உடைந்த வலியில் கண்களில் நீர் கோர்த்து.
இறங்கும் இடம் வந்தது. அமைதியாக இறங்கினேன். சொல்லி விடு என்று உடைந்த மனம் சொல்ல "ஆமாம் ப்ரவின் யூஸ் பண்ணிக்கிட்டேன். பட் அவனை, உன்னை அல்ல " என்றேன்.
அவன் முகம் உறைந்து நின்றது. எனக்கு மனம் லேசானது.ஹ்ம்ம்.. காதலுக்கு பிளான் வேண்டாம் தைரியம் போதும் போல.
முடிந்தது.
இங்கேயும் ஒரு காதல் சுனாமி தாக்கிவிட்டது.