குரல்

ஹலோ ஜில் டிவி"யா ?

ஆமாம் ......


உற்சாகமா பேச ஆரம்பித்தான் ஹரி ..எத்தனை நாள் ட்ரை பண்றேன் இன்னைக்கு தான் உங்க கிட்ட பேச வாய்ப்பு கிடைச்சி இருக்கு . எப்படி இருக்கீங்க மேடம் ?உங்க நிகழ்ச்சி டெய்லி பார்ப்பேன் . உங்க நிகழ்ச்சி எதாவது பார்க்க முடியலனா அன்னைக்கு முழுதும் எனக்கு வேஸ்ட் தான் மேடம் ....


அப்படியா ...மிக்க நன்றி உங்களுக்கு பிடித்த பாடல் வருது கேளுங்க .....


ஹரியின் செல்லிட பேசியில் அழைப்பு வர ...


ஹலோ யாரு ?

டேய் ஹரி நான் அம்மா பேசுறேன் ....

சொல்லுமா ......

எப்படி இருக்க ?சாப்டியா ?...நீ போன் பண்ணி ஒரு வாரம் ஆகுது டா ....


கொஞ்சம் வேலை அதான் பேச முடியல ....சரிம்மா நான் அப்புறம் பேசுறேன் ...


சரிடா கண்ணு உடம்ப பார்த்துக்க நல்லா சாப்பிடு ......

எழுதியவர் : kiln (12-Jun-15, 7:20 pm)
சேர்த்தது : rajakiln
Tanglish : kural
பார்வை : 214

மேலே