துணிவு - மனிதாபிமானம்

இன்று நான் அலுவலகத்திற்கு வழக்கம் போல்
பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். .
.
வழியில் ஒரு நிறுத்தத்தில்
ஒரு கர்பிணி பெண்மணி ஏறினார். .
.
அனைத்து இருக்கைகளிலும் பயணிகள்
அமர்ந்திருந்தனர் . (நான் நின்று கொண்டிருந்தேன்)
.
அந்த பெண்மணி நிற்பதற்கு சிரமப்படுகிறார்
என்பது அவரது முகத்தில் தெரிந்தது. .
.
அவர் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம்பெண்மணியிடம்
(மகளிர் சீட் ) "நீங்க எங்க இறங்கனும் ?" னு கேட்டார்.

அந்த பெண்ணும் தான் போகும் இடத்தை சொன்னார் .
அந்த கர்பிணி பெண்மணிக்கு இடம் கொடுக்க மனம் வரவில்லை. .
.
அந்த கர்பிணி பெண்மணி அருகில்
அமர்ந்திருந்த (ஆண்கள் சீட்)
ஒரு இளைஞனிடம் "நீங்க எங்க இறங்கனும் " னு கேட்டார்.
.
அந்த இளைஞன்
தான் இறங்கும் இடம் பற்றி கூட சொல்லவில்லை, .
.
அந்த கர்பிணியின் நிலைமையை புரிந்து கொண்டு
அவருக்கு தன் இடத்தை அளித்தார். .
.
இது தான் இந்தகால இளைஞனுக்கும்
இளம்பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம்...!

எழுதியவர் : (12-Jun-15, 2:51 pm)
பார்வை : 330

மேலே