முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா..........

நீ என் நிலத்தில் வீசிச்செல்லும்
முட்செடியிலிருந்தும் கூட
அழகான மலரையே
அறுவடை செய்கிறேன்
அம்மலரால் உன் மஞ்சத்தை
அலங்கரிக்காவிடினும்
உன் வரவேற்பறையில்
எங்கோ ஒரு மூலையில்
ஒதுக்கி வைத்து
அழகு பார்ப்பாய்
என்று நினைத்தேன் - ஆனால்
நீயோ...
அம்மலரின் வாசமறியாது
முள் என நினைத்தாய்
அம் முள்ளையும்
தெருமுனையில் வீசி
குப்பை சேகரிப்போரிடம்
விட்டுவிடுவாய் என நினைத்தேன்
ஆயினும் அவ்வழகு மிகு மலருக்கு
முட்களுக்குரிய மரியாதையும்
அளிக்காமல்
சாக்கடையில் வீசினாய்.....
உனக்குத் தெரியுமா ?
முள்ளில் தான்
ரோஜா பூக்குமென்று.....
.....................சஹானா தாஸ்
சில பெண்கள் நடந்த பாதையில் யாரும் நடக்கவும் முடியாது நடக்கவும் கூடாது

எழுதியவர் : சஹானா தாஸ் (13-Jun-15, 8:21 pm)
Tanglish : mullil roja
பார்வை : 272

மேலே