தீபம்
ஒளி தீபம்
உனக்கும் எனக்கும்
வழிகாட்டும் உத்தம ஆசான்
மாலை கவிந்தபின்
மாற்று ஒளி தீபம்
உற்றுப் பார்த்திருந்தால்
அறிவினில் ஒளிச் சுடரேற்றும் !
உலகின் ஒளி நிலவும் கதிரும்
பொய்யின் நிழலை விரட்டி
உள்ளத்தில் உன்னத ஒளி தரும்
சத்தியம் !
~~~கல்பனா பாரதி ~~~