என் கிராமத்துக் காதல் - உதயா
கருவாச்சியே
உன்ன காதலிச்ச
என் காலமெல்லாம்
உன்ன நெனச்ச
காலமும் இன்னும்
இருக்குதடி
இந்த காத்தையும்
தூதாய் அனுப்புறேன்டி
பொழுது சாயுமுன்னே
வெத்தல காட்டுக்கு
வெரசா நீயும்
வந்துடம்மா
நம்ம வாழ்கையை தேடி
போகலாம்மா
என் நெஞ்சுபுள்ளா
உன் நெனப்பு
நீ இல்லனா எனக்கில்ல
சுய நெனப்பு
மலையோரமேல்லாம்
தென்ன தோப்பு
அந்த மரத்திலே இருக்கு
நம்ம காதல் துப்பு
உங்க அப்பா கண்ணுல
பட்டிடுச்சே
உனக்கு கல்யாணமும்
முடிவாயிடுச்சே
ஊத்து தண்ணீ ஆத்தில் ஓடாமலே
மீனெல்லாம் மேய பாக்குதடி
என் இதயமும் கருவாடாய் போகுதடி
காத்திருக்கேன்டி
உனக்காக
இருட்டெல்லாம்
இங்க வரும் வரைக்கும்
இராவெல்லாம் நானும் காத்திருப்ப
என் கருவாச்சி உன்னையே நெனச்சியிருப்ப
நீ வந்தனா என் வாழ்கை
தொடருமடி
நீ வரலன்னா என் வாழ்க்கை
முடியுமடி
வந்துட்ட மாமா
உன் கருவாச்சி
இனி நம்ப வாழ்க்கையை
பத்தி நீ யோசி
உலக சுத்துற சூரியனே
கலங்கினாலும்
என் மாமா நீயோ
கலங்கலாமா ?
உன் கண்ணுல
தண்ணியும் சிந்தலாமா?
கருவாச்சியே உன்ன
காதலிச்ச
என் காலமெல்லாம்
உன்ன நெனச்ச
காலமும் இன்னும்
இருக்குதைய்யா
காத்தும் தூது
சொன்னதையா
பொழுது சாயுமுன்னே
ஊர தாண்டிடலா
வெரசா வா மாமா
கெளம்பி போலாம்
நம்ம வாழ்கையை தேடி
நாமும் போலாம்