தீப்பெட்டி ..!

ஒரு பிரசவம் ..!
ஒரு நூறு குழந்தைகள் .!
அத்தனையும் கெட்டி.!
எல்லாவற்றுக்கும் தலையில்
கனம் எனும் கட்டி .!

தாயோடு ஒவொரு முறையும்
ஒட்டி உரசினா பற்றி
எரிவதிலும் கெட்டி.!
தாய்க்கு இல்லை சேதாரம்.!
அழிவது என்னவோ செய்தானாம்.

ஆனாலும் கலங்காமல்
கடமையை செய்யும்
ஒரே தாய் இவள் தானாம் ..!

தலைக்கனம் உள்ளவர் வீழ்வதும்
சரிநிகராய் உள்ளவர் வாழ்வதும்
உலகில் இயற்க்கை -இதில்
மனிதன் கலைக்கமுடியாது செயற்கை .!

எழுதியவர் : (11-May-11, 2:32 pm)
பார்வை : 429

மேலே