கௌசல்யா -பாகம் 5
கௌசல்யா குமாரின் தந்தையிடம் உரையாடிய பின் .....
இப்போ சொல்லு குமார் ....
நானா தப்பு செய்தேன் . உங்க அப்பா என்ன இப்படி கேட்டதற்கு கயித்துல தொங்கணும் ..
இப்படி கேட்ட பிறகு உன்ன பார்க்காது இருக்க வேண்டும் என்று நினைத்தேன் ...
உன்ன காதலிச்சத தவிர எந்த பாவமும் செய்யாத எனக்கு இப்படி ஒரு தண்டனை
அன்னைக்கே சாகத்தான் நினைத்தேன் ..ஆனா !என்னவோ வாழணும்னு தோனுச்சு..
சரி வீட்டுக்கு போகலாம் போனேன் . பெத்தவங்க ... நான் செய்த பாவத்துக்கு திட்டி திதாங்க
என்னோட வாழ்கை இப்படி ஆனதல ரொம்ப சங்கட பட்டாங்க...
ஒரு நாள் அப்பா வந்து இப்படியே இருந்த எப்படி ..உன்ன இப்படி பாக்கவா நாங்க இருக்கோம் .
உனக்கு ஒரு நல்ல வாழ்கை அமைச்சு தர வரைக்கும் எங்களுக்கு நிம்மதியே இல்ல ..
பக்கத்துக்கு கிராமத்துல எனக்கு தெரிஞ்சு ஒரு பையன் இருக்கான் .நல்லவன் ...
நெறைய படிக்காடியு தனக்கு தெரிஞ்ச தொழில் செய்தான் ..
அவன் உனக்கு பொறுத்தம இருப்பான்...அவன நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா
நாங்களும் உன்னோட கல்யானத்த பாத்த சந்தோசத்துல நிம்மதியா உயிரை விடுவோம்
நல்ல யோசிச்சு ஒரு முடிவு எடு ..சங்கடமான முடிவு எடுத்துராத.....
இரவு முழுக்க நான் யோசிச்சு பார்த்தேன் .காதலிச்சு தெருவில நின்னப்ப கூட என்ன
ஏத்துகிட்ட என்னோட பெற்றோருக்காக நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் ..
இரவு விடிந்தது பெற்றோர் வந்து கேட்டனர் .என்ன முடிவு எடுத்திருக்காய் என்று
நான் அவர்களிடம் சம்மதம் என்றேன் ...
திருமணத்திற்கு உண்டான வேலைகள் எல்லாம் தடபுடலாகத்தான் நடந்தது
நாள் குறித்து நிச்சயம் செய்தனர் ....
ஒரு சில நாட்களில் திருமணமும் முடிந்தது ..இருவரும் சந்தோசமாகத்தான் வாழ்ந்து வந்தோம்
நாளாக என்னுடைய வயிற்றில் கரு உண்டானது ..குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக
இருந்தோம் ....குழந்தை பிறந்தது நான்கைந்து வருடங்கள் போனது . ஒரு விபத்தில் என் கணவர்
உடல் நலமில்லாமல் ஆனது ..விபத்தில் காயமுற்ற அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்
தகவல் தெரிந்ததும் விரைந்து சென்று பார்த்தேன் பலத்த காயம் ....
டாக்டர் ஒன்றும் சொல்லாமல் இருந்தார் .பயம் கூடியது ...
அனைத்து கடவுளையும் வேண்டினேன் ..... என்னுடைய பெற்றோர் என்னை பார்த்து மிகவும்
வேதனை அடைந்தனர் ......அந்த வேளையில் நர்ஸ் வந்து டாக்டர் கூப்பிட்டதாக
சொன்னாள்.........(தொடரும் )