தூங்காத இரவுகள்

இருக்கலாம்..,
என்னைச் சுற்றிலும் என் அகந்தைகள்
இரவைப் பகலாக்கியபடி...

~~~~~~~~
தூக்கம் அறுந்த
தனிமையின் இரவுகள்
கொஞ்சம் கடவுள்களும்
நிறைய சாத்தான்களுமாக
நீண்டு கொண்டே போகிறது,..

~~~~~~~~
தூக்கம்,
என் கண்களை மூடி
நான் தூங்கியதாக இல்லை...

~~~~~~~~
கொட்டிக் கிடக்கின்றன..
காணப்படாமலே
என் கனவுகள்...

~~~~~~~~
சிறு மரணமற்ற
என் இரவுகளும்
விடிந்து விடுகிறது....

~~~~~~~~

எழுதியவர் : புதிய கோடங்கி (15-Jun-15, 4:34 pm)
பார்வை : 505

மேலே