நீயும் நானும் யாரோ
என் பருவ வயதினில்
உன்னை பார்த்தேன்
உன் அன்பான பேச்சில்
நான் நனைந்தேன்
உன் அண்மை
எனக்குள் காதல் துளிர்விட்டது
உன் நினைவு
என்னை தாலாட்டியது
உன் வாசம்
என்னுள் வீசியது
இருவர் மனமும்
ஒன்றானது
இடையில்
உன் 32 வயதும்
என் 18 வயதும்
பிரித்தது
இன்று நீ எங்கோ
நான் இங்கு
உன் நினைவுகளை சுமந்து கொண்டு
நான் இன்று முதுமையில்
உன் நினைவுகள் இன்றும் இளமையில்
என்றேனும் ஒரு நாள் பார்ப்பேன் என
பார்வை சரியாக தெரியாது போனாலும்
கண்ணாடி அணிந்தேனும்
கண்ணில் படுபவர்களில்
உன் முகம் தேடுகின்றேன்
உயிர் பிரிவதற்கு முன்பேனும்
உன்னை பார்க்க மாட்டேனா
என்ற ஏக்கத்துடன்!