காதல் செய்தேன்
![](https://eluthu.com/images/loading.gif)
புதைத்த நெஞ்சத்தில்
மறைந்த மௌவல்
என்னுள் நனைந்த
வானத்தின் கொண்டல்
பிளந்துக் கொண்டு
நரம்பில் சேர்ந்து
உயிரை வந்து
கேட்டது இரவல்
விழுந்தேன் உன்னுள்ளே
மீண்டும் ஒருமுறை
கண்டுக் கொண்டேன்
நீ எனது மறை
காற்று வந்து கீறிச்
சென்ற உன் மூச்சுப்
பேச்சுகளில்
மயங்கி விட்டேன்
மலர்ந்து விட்டேன்
விரலில் நீர்கள்
ஊர்ந்துப் போக
ஓவியம் கண்ட
ரசிகன் நானே
காடைக் கடந்து
போனால் கூட
கவிகள் உரசும்
உணர்வுக் கொண்டேன்
இசைகள் கடத்திய
திசையில் உன்
பின்னால் தொடர்ந்து
உன்னுள் படர்ந்து
கண்டுக் கொண்டேன்
என் கண்ணில் கொண்டேன்
உன்னை நான்
காதல் செய்தேன்