பெண் -அர்ப்பணிப்பு
அழும் குழந்தைக்கு
தாலாட்டு பாடி
தூங்க வைக்கும் போது
அன்னையாக ...
கட்டிலில் படுத்துறங்கும்
தந்தைக்க்கு கால்
பிடித்து விடும் போது
மகளாக ....
கரம் பிடித்த கணவனின்
கடமைகளை கச்சிதமாய்
செய்து வேலைக்கு அனுப்பும் போது
மனைவியாக ...
இவை அனைத்தும் செய்து
முடித்து கலைந்த
தன கேசத்தை ஒதுக்கிவிட்டு
தட்டில் கொஞ்சம் பழைய
சாதம் போட்டு சாப்பிடுகையில்
அன்று நடந்தவைகளை
அசை போட்டாள்..பெண்