துளிப்பா ஹைக்கூ கவிஞர் இரா இரவி
![](https://eluthu.com/images/loading.gif)
துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !
நூற்க முடியாத
வெண்பஞ்சு
வானத்தில் !
காளை என்றால் மகிழ்ச்சி
மாடு என்றால் கோபம்
இளைஞன் !
இனிதாக்கியது
பயணத்தை
இசைப்பாடல் !
கண்ணிர்க்குக் குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
மலர்ந்த மலர்கள் !
மனதின் இருப்பிடம்
இதயமல்ல இன்று
மூளை !
பெரு மழை
துளிர்த்தது
பட்டமரம் !
வயது அறுபது
கல்லூரி மாணவர்
கதாநாயகன் !
சம்பளம் கோடி
பாத்திரம் ஏழை
நடிகர் !