அவள் முகம்

கதிரவன் கதிர் வீசும் ஆழ்கடல் பொன்மீனை
கூர் அம்பாள் பாய்ச்சி கண்களை
செய்தானோ பிரம்மன்.
கூர் அம்புகள் பல மனதினை
தாக்கிய உணர்வு வரும் யாவருக்கும்
அக்கண்ணை காண்கையில்.

போர்களத்தில் போரிட்டு அம்புகள் இழந்து
தனித்த நிறைபலம் கொண்ட வில்கள் பல சேர்த்து
புருவங்கள் செய்தானோ பிரம்மன்.
யாருக்கும் வளைத்திட பேர் அரக்கரும்
வணங்கி நிற்பர் அவள் வில்
புருவ்கள் கண்டு.

கயிலாயன் கையால் பிளந்த ஓர்
மலைதுண்டை பாற்கடலில் இட்டு
மூக்கினை செய்தானோ பிரம்மன்.
பால்மணம் மாற மழலைகள் கூடி
அவள் மூக்கோடு மூக்கிட்டு கொஞ்சி
விளையாடி செல்வர்.

பல்வகை பழச்சாற்றில் தேனில் மிதந்த
ரோஜா இதழ்களை இட்டு அவள்
இதழ்களை செய்தானோ பிரம்மன்.
அழகிய வண்ணத்து பூச்சிகள் தன்னிலை
மறந்து அவள் பின்செல்லும் மணம் வீசும்
செவ்விதழ் கண்டு.

முழுமைபெற்ற மூத்த மர வேர்களை
தங்க கம்பியில் கட்டி வைரங்கள் பதித்து
காதினை செய்தானோ பிரம்மன்.
காற்றில் கலைந்த கூந்தலை அவள்,காதின்
பின்புறம் ஒதுக்கும் அழகினை கண்டு
காற்று மகிழும்

ஐவகை நிலங்களின் மண்ணினை,
பதினான்கு ஆற்று நீரில்லிட்டு,
ஆகாய விண்மீன்களை தூவி,தீ மூட்டி,
தென்றலிடம் கொடுத்து முகத்தினை
செய்தானோ பிரம்மன்
பஞ்சபூத மகள் என தோன்றியவளின்
மதி முகம் கண்டு மதியவரும்
மதி மயங்கி வாய் மூடி நிற்பர்...........

எழுதியவர் : anuranjani (16-Jun-15, 9:53 am)
Tanglish : aval mukam
பார்வை : 253

மேலே