பார்த்து ரசிக்க ஆசை

பூத்து குலுங்கும் ரோஜாவை
பார்த்து ரசிக்க ஆசை தான்

பட்டாம் பூச்சியின் பறக்கும்
அழகை பார்த்து ரசிக்க
ஆசைதான்

கொட்டும் அருவியின்
அழகை பார்த்து ரசிக்க
ஆசைதான்

துள்ளி ஓடும் புள்ளி
மானின் அழகை பார்த்து
ரசிக்க ஆசைதான்

கிளைக்கு கிளை தாவும்
மந்தியின் தாவும் அழகை
பார்த்து ரசிக்க ஆசைதான்

வானில் தோன்றும்
முழு மதியின் ஓ ளி
அழகை பார்த்து ரசிக்க
ஆசைதான்

இவை அனைத்தையும்
கண்ணொளியில் பார்க்காமல்
மனகண்ணில் பார்த்து
ரசிப்பவன் ....

எழுதியவர் : கவியாருமுகம் (16-Jun-15, 10:31 am)
பார்வை : 70

மேலே