கல்லூரி

முதல் நாள் அழுகை
முதன்முறை பார்த்த விடுதி

உறவுகள் பிரிந்த பின்பு
உறுதுணையாய் கிடைத்த தோழர்கள்

எப்போதும் அரட்டை சத்தம்
எப்போதாவது படிக்கும் சத்தம்

ஒன்றாய் சேர்ந்து பார்த்த திரைப்படம்
ஒன்றுமே புரியாத வகுப்புப் பாடம்

அதிர்ச்சி ஊட்டும் தேர்வறை
ஆட்டம் போடவைக்கும் விடுதிஅறை

எண்ணஅலையில் நீங்காத பதிவுகள்
என்றுமே கல்லூரியின் நினைவுகள்

மகிழ்ச்சி ஊட்டும் கல்லூரி நினைவுக்காக
மீண்டும் பிறந்து வருவோம் மாணவனாக!!!!

எழுதியவர் : நாகலட்சுமி (16-Jun-15, 11:22 am)
Tanglish : kalluuri
பார்வை : 84

மேலே