எங்கேயும் எப்போதும் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு கட்டுரை
எங்கும் எப்பொழும் பெண்களை சுற்றியே நடத்தப்படும், நடக்கும் கொடுமைகள் பற்றிய ஒரு சிறுகதை ... வெவ்வேறு நாடு , வெவ்வேறு கலாச்சாரம், வெவ்வேறு வாழ்க்கை தரம் என ஆயிரம் விடயங்கள் மாறி இருந்தாலும் அங்காங்கே அரங்கேறும் பாலியல் வன் கொடுமைகளுக்கு மட்டும் விடிவுகள் பிறப்பதே இல்லை என்பது எத்துனை உண்மை என்பதை விளக்குகிறது இக்கதை .....
நியூயார்க், வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டு மக்கள் எங்கும் இயந்திரமாக சுற்றித்திரியும் மாநகரத்தின் மாலைப்பொழுது சிறிது நேரத்தில் சாராவிற்கு மட்டும் கொடும்பொழுதாக மாறிவிடுகிறது .... தங்கள் விருப்பம் போல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் முழு சுதந்திரம் படைத்த பெண்களை கொண்ட நாடான பொழுதும் விருப்பம் இல்லாத தொடுதலில் ஈடுபாடு இல்லாத சுய மரியாதை கொண்ட பெண்ணாகவே சாரா முற்பகுதியில் மெளனமாக நடை போடுகிறாள் ... ஒருவனுக்கு தன்னை பிடிக்கவில்லை , இனிமேல் சேர்ந்து வாழ வழியில்லை என்றவுடன் சாரா எடுக்கும் முடிவு இன்றைய படித்த இந்திய பெண்களுக்கு ஏனோ வருவதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து ..இந்த பகுதி பெண்களுக்கான சுயமரியாதையை அழகாக எடுத்துரைத்திருக்கிறார் தோழர் ....
பதினெட்டு வயது மகள் ரிசானா , தன் தந்தையின் பாரம் குறைக்க சவூதி செல்வது இயல்பான ஒன்றே என்றாலும் தாயும் மகளும் பேசும் நேரம் அதிகப்படும் பொழுது தன் மகள் பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தும் உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் தந்தை பஷீர் கதையில் ... ஏனைய வெளிநாடு வாழ் பெண்களின் வீடுகளிலும் இந்நிலைமை இருப்பதை உணர்த்துகிறது இப்பகுதி ..... பெண்ணின் நிலைமையோடு நம் தம்பி தீவில் நடக்கும் நிகழ்வுகளையும் , வன்முறைகளையும் ஒரு சாதாரண சிற்றுண்டி கடைக்காரர் பஷீர் கண்களில் பார்வையிட வைத்திருக்கிறார் ஆசிரியர் ......
எத்தனை தான் போற்றி புகழ்ந்து சீராட்டி ஒரு தந்தை ஒரு பெண்ணை வளர்த்தாலும் தாய் போல் ஆகாது என்பது நிதர்சனம் ..... பாத்திமாவின் குரலுக்கு பஷீர் செவி சாய்க்கவில்லை என்பது மேலும் ஒருவகையில் மனைவியை மட்டம் தட்டும் கணவனாக கதைக்குள் கதையாக பஷீர் இருக்கிறார் ......
மூன்றாவது பகுதி படிக்கும் போதே உள்ளூர நம் நாட்டு அரசியல் தலைவர்களை அசிங்கமாக திட்டத் தோன்றுகிறது .... சட்ட மன்றத்தில் வேட்டி அவிழ்ந்து விழும் நிலை கூட தெரியாமல் சண்டையிடும் மாமேதைகளுக்கு நம்மூர் செல்விகள் மானம் போவாத தெரிந்துவிடப்போகிறது ...... ?????????
இன்னும் எத்தனை கிராமங்கள் இந்தியா முழுவதும் இருக்கிறதோ இப்படி பல ஆயிரம் செல்விகளை தொலைத்துவிட்டு ..... பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் யோசிக்க இடம் அளித்து இருக்கிறது இந்த பகுதி ..... இன்னும் நகரங்களில் வாழும் சராசரி மக்கள் தங்கள் வாழ்க்கையில் பொது கழிப்பிடம் செல்வதையும் காலைக் கடனில் ஒன்றாக வைத்திருக்கின்றனர் .... காலை ஆறுமணிக்கு திறந்து இரவு ஏழு மணிக்கு அதை அடைத்தும் விட்டு சென்றிடுவார்கள் .... ஆண்களுக்கு கவலை இல்லை ... வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் நிலை ????? இங்கும் கேள்வி குறிதான்,.......
தாமரையும் கஸ்தூரியும் கதையில் சாக வேண்டியது இருக்கிறது நமக்கான நியாயமான தேவைகளை இந்த உலகத்திற்கு சொல்ல .....
செல்வியின் மனநிலை வார்த்தையால் விளக்க முடியவில்லை,...... பள்ளியிலே கழிப்பிடம் இருந்தாலும் தண்ணீர் வேண்டுமே என வாசிக்கும் போது ஐயோ பெண்ணே என்று அழவைக்கிறார் ஆசிரியர் ....... புதர் தேடும் அவஸ்தை அவளுக்கு .....
மூன்று பேர் மூன்று கதை.. அங்கே அவர்கள் சராசரி மனித நேயத்துடன் கூட நடத்தப்படவில்லை என்பது ஒரு கதையாக இருந்தாலும் இறுதி பத்தியில் செய்தி வேறுவிதமாக வேதனையுடன் முடிகிறது .....
மேல இரண்டு வரிகள் சொன்னதை மறுபடியும் யோசிக்கிறேன் "வெவ்வேறு நாடு , வெவ்வேறு கலாச்சாரம், வெவ்வேறு வாழ்க்கை தரம் என ஆயிரம் விடயங்கள் மாறி இருந்தாலும் அங்காங்கே அரங்கேறும் பாலியல் வன் கொடுமைகளுக்கு மட்டும் விடிவுகள் பிறப்பதே இல்லை என்பது எத்துனை உண்மை" .....