ஜன்னலில் தெரிந்த தலை
பூமியை மறைக்கும் போர்வை
அவளது கூந்தல் ...
எங்கும் கிடைக்காத மீன்
அவளது கண்கள் ...
மனிதன் காணாத மாம்பழம்
அவளது கண்ணம்...
பிரமிடு காணாத முக்கோணம்
அவளது மூக்கு ...
தேனிக்கள் சேகரிக்காத தேன்
அவளது உதடு...
சூரியன் தராத வெளிச்சம்
அவளது பல் ...
வானவில் தங்கும் கூடாரம்
அவளது காது...
சத்தமிடாத சங்கு
அவளது கழுத்து ...
அன்றொருநாள்
ஜன்னலில் தெரிந்த தலை
இறைவனின் கலை ...
அந்த சிலை
நான் சிக்கிய வலை ...