இணைந்த உயிர்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
அக்கரைக்கு போன
பரிசல் வந்து விடும்..
..
கடைசி பயணம்..
இனி
இந்த ஊருக்கும் எனக்கும்
எல்லாம் முடிந்தது..
..
அக்கரை சேர்ந்ததும்..
இருட்டில் தட்டு தடுமாறி
ஒரு வழியாய்..
சாலையைப் பிடித்தேன்..
..
இங்கேதான்
காத்திருப்பேன் என்று
சொன்னானே...
..
பயம்..
நெஞ்சைக் கவ்வ துவங்கிட..
திரும்பி நடந்தேன்..
இருளில்..!
..
காலை இடறியது
எதுவென்று குனிந்தேன் ..
எனது உயிர் அங்கே
போய்க் கொண்டிருந்தது..
..
அதன் மேல் விழுந்து
அதனுடன் இணைந்தேன்..
..
..
அமுதா..அமுதா
என்று யாரோ தூரத்தில்
கத்துவது..
கொஞ்சம்
கொஞ்சமாக..
காதில் விழுவது
நின்று போனது!